ஜம்மு - காஷ்மீர் எல்லையில் உள்ள லடாக் மலைப் பகுதியில் சில இடங்களில் எல்லையை நிர்ணயிப்பதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதும், பின்னர் அவர்கள் பகுதிக்கு திரும்பிச் செல்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.இப்பிரச்சனை பகுதியில், சீன ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறந்து காலாவதியான உணவுப் பாக்கெட்களை வீசிச் சென்றுள்ளது.
இது குறித்து சீன அரசிடம் ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் கூறியுள்ளார்.
இந்த அத்துமீறல் உடனடியாக கண்டுபிடிக்க படவில்லை. இத்தகையான அத்துமீறல்களை தடுக்கவும், உடனடியாக கண்டுபிடிக்கவும் இந்தியா தன் இராணுவ திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும்..
வரும் முன் காப்பதே சிறந்தது!!..











0 பின்னூட்டங்கள்