விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதை மத்திய அரசு தடுக்ககோரி பச்சப்பன் பச்சோ அந்தோலன் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை (09.12.2009) விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதனால், நீதிபதிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் இது குறித்து கூறியதாவது, உலகின் புராதன தொழிலான விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினம் என்று சொல்கிறீர்கள். உங்களால் விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் நீங்கள் (மத்திய அரசு) சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது? அப்படி சட்டப்பூர்வமாக ஆக்கினால், அந்த தொழிலை உங்களால் கண்காணிக்க இயலும். அதில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வளிக்க முடியும். மேலும் அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் தர இயலும்.

பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதை தடுக்க அதை சட்டப்பூர்வமாக ஆக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். தண்டனை அளிப்பதன் மூலம் உலகில் எங்குமே விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை.

ஏதாவது ஒரு வகையில் இந்த உலகில் விபசாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எங்குமே சட்டப்பூர்வமாக தடுக்கமுடியவில்லை. எனவே, நீங்கள் ஏன் அதை சட்டப்பூர்வமாக ஆக்க கூடாது?... என்று நீதிபதிகள் கூறினர்.

இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், இதை கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், நீதிபதிகள் இருவரும் கூறுகையில், "நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி பற்றி நாம் பெருமையுடன் பேசுகிறோம். ஆனால், நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தில் இருந்து தற்போது 37 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 5, 6 குடும்பங்களின் வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து இருப்பதாக கருதக் கூடாது. ஒழிக்கப்படவேண்டிய வறுமை நிலை காரணமாகத்தான் சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவதும், விபசாரத் தொழில் செழிப்பாகவும் நடப்பதற்கு முக்கிய காரணம்'' என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் புது இரண்டு சக்கர வாகனங்கள்!!


ஹோண்டா : ஹோண்டா நிறு​வ​னத்தின் 110 சிசி திறன் கொண்ட நியூ ஏவி​யேட்​டர் ஸ்கூட்​டர் சென்​னை​யில் அறி​மு​கப்​ப​டுப்பட்டது. இந்த புதிய வகை ஸ்கூட்டரை அந்நிறு​வ​னத்​தின் துணைத் தலை​வர் அனு​பம் மொஹிண்ட்ரூ அறி​மு​கப்​ப​டுத்​தி​னார். ஏற்​க​னவே அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டுள்ள ஏவி​யேட்​ட​ரைக் காட்​டி​லும் 15 சத​வீ​தம் கூடு​தல் செயல் திறன் கொண்​டது நியூ ஏவியேட்டர் ஸ்கூட்டர். எரி​பொ​ருளை சிக்​க​னப் படுத்தும் இந்த ஸ்கூட்டரின் விலை முறையே ரூ. 43,938 மற்​றும் ரூ. 48,938 ஆகும். ஐந்து கண்​க​வர் வண்​ணங்​க​ளில் இவை வெளி​வந்​துள்​ளன.​ ​ டெலஸ்​கோப்​பிக் சஸ்​பென்​ஷன்,​ முன்​புற டிஸ்க் பிரேக்,​ 20 லிட்​டர் கொள்​ள​ளவு கொண்ட பெட்டி,​ டஃப் அப் டியூப், கோம்பி-​பிரேக் சிஸ்​டம்,​ பரா​ம​ரிப்பு தேவைப்​ப​டாத பேட்​டரி,​ விஸ்​கோஸ் ஏர் ஃபில்​டர் ஆகி​யன இதில் புதி​தாக சேர்க்​கப்​பட்​டுள்ள சிறப்​பம்​சங்​க​ளா​கும். அ​டுத்த ஆண்டு ஏப்ர​லில் அமல்​ப​டுத்​தப்​பட உள்ள பாரத்-​3 சுற்​றுச் சூழல் விதி​மு​றைக்​கேற்ப சான்​றி​தழ் பெற்ற வாக​ன​மாக இது வெளி​வந்​துள்​ளது.


டி.வி.எஸ்: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய வகை பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. புதிய பைக் மற்​றும் ஸ்கூட்​டரின் தனித்துவம் என்னவென்றால், கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் கியர்​கள் கொண்டு இருப்பதே ஆகும். டிவி​எஸ் ஜைவ்...டிவி​எஸ் ஜைவ் மோட்​டார் சைக்​கிள் கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் வகை​யில் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. பைக் எந்த கிய​ரில் சென்று கொண்​டி​ருந்​தா​லும் உட​ன​டி​யாக நியூட்​ர​லுக்​குக் கொண்டு வர முடி​யும்.

கியரை படிப்​ப​டி​யா​கக் குறைத்து நியூட்​ர​லுக்கு வர வேண்​டிய அவ​சி​யம் இல்லை. பைக்கை எந்த கிய​ரில் நிறுத்​தி​னா​லும்,​ அதே கிய​ரில் வண்​டியை தொடர்ந்து இயக்க முடி​யும். ​ 110 சிசி என்​ஜின்,​ 12 லிட்​டர் கொள்​ள​ளவு உள்ள பெட்​ரோல் டேங்க் ஆகி​ய​வற்​று​டன் கூடு​த​லாக பைக் இருக்​கை​யின் அடி​யில் பொருள்​களை வைத்​துக் கொள்ள இட வசதி உள்​ளது. இதில் ஒரு குடை,​ தண்​ணீர் பாட்​டில்,​ ஃபைல் ஆகி​ய​வை​களை வைத்​துக் கொள்​ள​லாம். இதன் விலை ரூ. 41 ஆயி​ர​மா​கும்.டிவி​எஸ் வீகோ 110 சிசி என்​ஜின்,​​ 12 அங்​குல அள​வுள்ள அலாய் வீல்​கள் பொருத்​தப்​பட்​டுள்ள இந்த ஸ்கூட்​டர் குடும்​பத்​தில் உள்ள அனை​வ​ரும் எளி​தில் ஓட்​டக் கூடிய விதத்​தில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்கூட்​ட​ரின் பின்​பு​றத்​தில் பெட்​ரோல் டேங்க் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஐந்து லிட்​டர் கொள்​ள​ளவு பெட்​ரோல் டேங்க்,​செல்​போனை சார்ஜ் செய்​யும் வசதி உள்​ளிட்​டவை இதில் உள்​ளன. கருப்பு,​ கரு​நீ​லம்,​ கேப்​பச்​சீனோ ப்ரெüன்,​ சில்​வர் உள்​ளிட்ட ஐந்து நிறங்​கள் கொண்ட இதன் விலை ரூ. 42 ஆயி​ரம் ஆகும்.

என்பீல்டு: டில்லியில் கிளாசிக் 350 ராயல் என்பீல்டு பைக் அறிமுகப் படுத்தப் பட்டது. எஜ்சர் குரூப் எம்.டி., மற்றும் சி.இ.ஓ., சித்தார்த் லால் மற்றும் பைக் வடிவமைப்பாளர் சிக்கா ஆகியோர் பைக்கை அறிமுகப் படுத்தினர்.

பஜாஜ்: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜப்பானின் கவாஸாக்கி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் பல சொகுசு பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாக்கி பஜாஜ் சார்பில், நின்ஜா 250 ஆர் என்ற பெயரில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த பைக்கின் விலை ரூ.2.69 லட்சமாக இருக்கும். ஐரோப்பிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. இந்தியாவில் ஏற்கனவே, யமஹா மற்றும் சுசூகி நிறுவனங்கள் சார்பில் சொகுசு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக தற்போது, நின்ஜா 250 ஆர் பைக் களத்தில் குதித்து உள்ளது. டெலஸ்கோபிக ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் யுனி டிரக் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கின் முன்பக்க மற்றும் பின் பக்க பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக், கவாஸாக்கி நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் ஒன்றாக இணைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து முழுமையான பைக்காக இறக்குமதி செய்தால், 100 சதவீத வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே, உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு முழு மைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக 11 சதவீத வரி தான் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், நின்ஜா 250 ஆர் பைக்கின் விலை ரூ.2.69 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.

இந்தியா நம்பர்- 1, கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் 77 ஆண்டு வரலாற்றில் முதல் சாதனை!!

டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்.


இன்று ( 6ம் தேதி ) இந்தியா, இலங்கை அணிகள் மோதிய 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 393 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 726 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் ‌ஆட்ட துவக்கம் முதலே சரிய துவங்கின.


இறுதியாக இலங்கை தனது 2வது இன்னிங்சில் 309 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை ‌பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சங்ககரா 137 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது.

ஆட்ட நாயகனாக சேவாக் : அதிகமாக ரன்குவித்த சேவாக் ( 293 ரன்கள் ) ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முத்தையா முரளிதரனுக்கு பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக சேவாக்-டிராவிட் ஜோடி தேர்வு செய்யப்பட்டது.

படிக்கட்டு பயணங்கள்!!!

Posted by மௌனமான நேரம் Saturday, 5 December 2009 0 comments

படிக்கட்டு பயணங்கள்!!!





போலீஸ் பாதுகாப்பில் படிக்கட்டு பயணங்கள்!!

இப்போ என்ன பண்ணுவீங்கோ!!


தமன்னா!!

Posted by மௌனமான நேரம் 0 comments

தமன்னா!!

தமிழ் திரையுலகமே தமன்னா பக்கம் சாய்ந்திருக்கிறது. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்றும் அழகு இல்லை என்று ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்ட தமன்னாவுக்கு இப்போ செம மவுசு.

ஹூரோக்களும், இயக்குநர்களும், புரடியூசர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமன்னாவை புக் பண்ணுகிறார்கள்.

அதுமட்டுமல்ல சின்ன இடைவெளி கிடைத்தாலும் தமன்னா பற்றி பெரிய புராணம் பாடிவிடுகிறார்கள். படிக்காதவன் பட ஆடியோ வெளியீட்டின் போது சேரனும், அமீரும் மாறி மாறி அவரின் பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.

"எனக்கு தமன்னாவ ரொம்ப பிடிக்கும். நான் அவரோட அழகுல மயங்குறேன். அதுக்காக நான் அவர காதலிக்கிறேன்னு எழுதிடாதீங்க" என்று ஜெயம்ரவி போட்டுத்தாக்கினார்.

தில்லாலங்கடி பட விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், தமன்னாவின் அழகு சூப்பர் என்றார். இப்போது பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், "தமன்னாவின் நடிப்பில் படத்துக்கு படம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சீக்கிரமே அவர் சிம்ரன் இடத்தை பிடிப்பார்" என்றார்.

ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....

நடிகை நயன்தாரா ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டார். முன்பெல்லாம் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டி வந்த நயன்தாரா பிரபுதேவாவுடனான லவ்வுக்கு பிறகு நெருக்கத்துக்கு நோ சொல்லி விடுகிறாராம். தற்போது ஆர்யா ஜோடியாக நடி்தது வரும் பாஸ்கர் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க முடியாது என்று கறாராக கூறி விட்டாராம்.

காபி வித் அனு சீசன் 3ல் நயன்தாரா!

புது நிகழ்ச்சிகளில் வழங்குவதில் புதுமை படைத்து வரும் விஜய் டி.வியில், "காபி வித் அனு சீசன் 3' மீண்டும் இடம் பெற துவங்கி உள்ளது. "அணு அள​வும் பய​மில்லை' சீசன் ஒன்றை முடித்​து​விட்டு,​ மீண்​டும் இந்​நி​கழ்ச்​சிக்​குப் பொறுப்​பேற்​கி​றார் அனு​ஹா​சன். முதல் வார சிறப்பு விருந்​தி​னர் நயன்​தா​ரா​வாம். "கலை' முதல் "காதல்' வரை மனம் விட்டு பேச தயாராகி வருகிறாராம் நயன்தாரா. விரைவில் விஜய் டி.வி.,யில் நயன்தாராவை எதிர்பார்க்கலாம்.

சந்தையில் புதுசு - இந்தியாவில் புதிய ரக கார்கள் அறிமுகம்

சென்னையில் நியூ மெர்சிடிஸ் பென்ஸ் ஈ350 சி.டி.ஐ., ப்ளூ எபியன்சி கார் அறிமுகப் படுத்தப் பட்டது. குறைந்த எரி பொருள் செலவில், புதிய இ350 கார் அறிமுகப் படுத்தப் பட்டது. டீசலில் இயங்க கூடிய இந்த காரை பிரபல சொகுசு கார் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஜ் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன் மதிப்பு 45 லட்ச ரூபாயாகும். இதனை, மெர்சிடிஸ்-பென்ஜ் இந்தியா தலைமை செயல் அதிகாரி வில்பிரைட் ஆல்பர் அறிமுகப் படுத்தினார். இந்நிறுவனம், ஏற்கனவே அறிமுகப்படுத்திய இதே ரக கார்களை விட, இ350 ரக காருக்கு 13 விழுக்காடு எரிபொருள் குறைவாக செலவழியும். இதன் மற்றொரு சிறப்பம்சம் சுற்றுச் சூழல் மாசுபடுத்தாத தன்மையாகும்.


கோல்கட்டாவில் புதிய இன்டிகா மான்ஷா கார் அறிமுகப் படுத்தப் பட்டது. இதனை டாடா மோட்டார்ஸ் தலைவர் ( கார் உற்பத்தி குழு) நிதின்செத், மாடல்களுடன் அறிமுகம் செய்து வைத்தார்.



மும்பையில் பிரிமியர் ரியோ கார் அறிமுகப் படுத்தப் பட்டது. முதல் காம்பாக்ட் டீசல் மினி-எஸ்.யு.வி.,வை அறிமுகப் படுத்தி வைப்பவர் பிரீமியர் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மைதிரியா தோஷி.

எஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி!

ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு என்ற கட்டணத்தில் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.


நிறுவனத்தின் தமிழகம்,கேரள தலைவர் வி.ஜி.சோமசேகர் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: ரிலையன்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'சிம்ப்ளி ரிலையன்ஸ்' திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப திட்டங்களை அறிவிக்கிறோம். எங்களிடம் மறைமுக கட்டணம் இல்லை. எஸ்.எம்.எஸ்., உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு திட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்கிறோம்.


சி.டி.எம்.ஏ., - ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை, மாதம் 11 ரூபாய் செலுத்தி பெறலாம். உள்ளூர், ரோமிங் என எந்த நெட்வொர்க்கிற்கு மெசேஜ் அனுப்பினாலும் இதே கட்டணம் தான். ரிலையன்சிற்கு நாடு முழுவதும் சொந்தமாக டவர், கேபிள் இருப்பதால் எந்த போட்டியையும் சமாளிப்போம், என்றார்.


நன்றி: தினமலர்

இந்தியாவில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சி!

வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.1707 ஆக இருந்தது. நேற்று அது ரூ.1687 ஆக குறைந்தது. இன்று (சனி) தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் இன்று காலை நிலரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1638 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று காலை ரூ.13,104 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய விலையை விட ரூ.392 குறைவாகும்.

ஒரு கிராமிற்கு 49 ரூபாய் சரிவு ஏற்பட்டதால் இன்று நகை வாங்க சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 624 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



திருமணம் - அவசியமா அனாவசியமா?

Posted by மௌனமான நேரம் Monday, 30 November 2009 0 comments

திருமணம் - அவசியமா அனாவசியமா?

'எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை' என்று சொல்வது இப்போ கொஞ்சம் பேஷன் ஆகிவிட்டது. சினிமாவில் உள்ளவர்களும், மேல் தட்டு மக்களும் என்ன நினைகிறார்கள் என்பதை விட.. இந்த எண்ணம் நடுத்தர வர்க்கம் நடுவில் கூட இருப்பது தான் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது.

சமீபத்தில், என்னக்கு தெரிந்த ஒரு ஜோடியை சந்திக்க நேர்ந்தது. அவர் மிகவும் மதிக்கப்டும் ஒரு ஆசிரியர். ஆனால் திருமணம் என்னும் சடங்கில் அவருக்கு நம்பிக்கை இல்லையாம். 'உன்னை காதலிக்கிறேன். ஆனால் திருமணத்தில் என்னக்கு நம்பிக்கை இல்லை' என்று சொல்லிவிட்டார். அந்த பெண்ணின் வீட்டில் அவள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். அவளும் திருமணத்திற்கு தயாராகத்தான் இருந்தால். ஆனால் திருமணம் செய்து கொள்ள அவர் தயாராக இல்லை. திருமணம் செய்யாமால் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ் என்று சொல்லி வழியனுப்பும் அளவுக்கு அவள் பெற்றோருக்கு பரந்த மனது இல்லை. அந்த ஜோடி என்ன செய்ய போகிறார்களோ தெரியவில்லை.

இப்படி திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூறும் ஒரு காரணம் - மனதில் இவருடன் தான் வாழவேண்டும் என்று முடிவு செய்த பின் திருமணம் எதற்கு என்பதுதான்.


சரிதான்!!!


நன்றாக வண்டி ஓட்ட தெரிந்தவனுக்கு, சாலை விதிகளை பின்பற்றுபவனுக்கு அந்த விதிகள் தேவை இல்லை தான். ஆனால் உலகில் எல்லோரும் அப்படி இல்லையே. அதற்காக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதி வைக்க முடியுமா? அப்படி வைத்தால் அந்த விதிமுறைகளால் என்ன பயன் தான் கிடைக்கும்?

திருமணம் என்பது மனிதனை ஒரு கட்டுகொப்புக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உருவாக்கபட்டது என்பது என் எண்ணம். இன்னார் என்று இல்லாமல் எல்லோருடனும் சேர்ந்து இருக்கும் விலங்குகளில் இருந்து மாறி, தனக்கென்று கோட்பாடுகள், வரையறைகள் வகுத்து மனிதன் வளர்ச்சி அடைந்து இருக்கும் இந்த கால நிலையில் திருமணம் என்பது அவசியம் என்ற எண்ணமே என் மனதில் மேலோங்கி நிற்கிறது!!!!

இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை சூடு பிடிக்கிறது!

நானோ கார்களுக்கான முன்பதிவுக்கு எல்லாரும் முண்டியடிக்கும் இந்தியாவில்தான், அதிக விலையுள்ள சொகுசு கார்களும் அதிகளவில் விற்பனையாகின்றன. சொகுசு கார்களின் சொர்க்கமான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இப்போது சிறிய, எரிபொருள் சிக்கனம் வழங்கும் கார்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 15 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை விலையுள்ள உயர்தர சொகுசு கார்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இந்த ஆண்டு இலக்கு மூவாயிரம் கார்கள். வோல்க்ஸ்வேகன் பசாட் (24 லட்ச ரூபாய்), டயோட்டா பார்ச்சூனர் (20 லட்ச ரூபாய்), ஹோண்டா சிஆர்-வி (22 லட்ச ரூபாய்) கார்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக விற்றுத் தீர்த்திருக்கின்றன.


சர்வதேச அளவில் மிகப் பிரபலமான ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் சொகுசு கார்கள், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார்கள், டாடா நிறுவனம் மூலம் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜாகுவார் கார்கள் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் விலை 63 லட்சத்தில் இருந்து 93 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாண்ட் ரோவர் கார்களும் மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகின்றன. பிரிட்டனின் கவுரவம் மிக்க இந்த சொகுசு கார்கள் தயாரிப்பில் டாடா நிறுவனமும் ஈடுபட்டிருக்கிறது.

டாடா நிறுவன சேர்மன் ரத்தன் டாடா கூறுகையில், 'சொகுசு கார்கள் பயன் பாட்டை இந்திய மக்கள் அனுபவிக்க வசதியாக இந்த சிறப்பு மிக்க கார்கள் இங்கே விற்கப்படும். டாடா நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுவரை பிரிட்டிஷார் பெருமை என்று கருதப்பட்ட இவை, இனி இங்கே விற்பனைக்கு வருகின்றன' என்றார்.

கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)

Posted by மௌனமான நேரம் Saturday, 28 November 2009 0 comments

கலியுக சிலந்தி மனிதன் (Spider Man)

அலைன் ராபர்ட் (Alain Robert, 47) ஒரு கலியுக சிலந்தி மனிதன் (Spider Man) என்றே சொல்லலாம். கயிற்றின் உதவி இன்றி உயர்ந்த கட்டடங்களில் ஏறுவது இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஈபில் டவர் (Eiffel Tower) , லண்டன் கானரி வார்ப் (London's Canary Wharf building) , நியூ யார்க் எம்பைர் ஸ்டேட் பில்டிங் (New York's Empire State Building) and சிகாகோ சீயார் டவர் (Chicago's Sear's Tower) ஆகிவை இவர் ஏற்கனவே ஏறி சாதித்த சிகரங்கள். இவர் ஏறிய கட்டடங்கள் மொத்தம் 80.


இவர் மலேசியா வில் தன்னுடைய அடுத்த சாதனையை நிகழ்த்தும்போது காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர் . 88 அடுக்கு மாடி கட்டடத்தை பெட்ரோனாஸ் ட்வின் டவர்-ஐ (Petronas Twin tower) ஒரு மணி 45 நிமிடங்களில் ஏறி இருக்கிறார்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே உயரம் என்றால் ரொம்ப பயமாம், தனக்கு கொஞ்சம் கூட தன்னம்பிக்கை இருந்ததில்லை என்கிறார்.

ரணில் விக்ரமசிங்கே? பொன்சேகா? மகிந்தரா ராஜபக்ஷே?

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் சுதந்திர கட்சி சார்பில் அதிபர் மகிந்தரா ராஜபக்ஷே போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஐக்கிய தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டது.

இதன் சார்பில் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இந்த நிலையிலும், இலங்கை அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்று அதிபரானால் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவார் என இலங்கை சுதந்திர மகாஜன கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 25 ஆண்டுகளாக நீடித்து வந்த சண்டை, கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. ராணுவ வெற்றிக்கு, அப்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தான் காரணம் எனக் கூறப்பட்டது. வெற்றியை தேடித் தந்ததற்கு பரிசாக, இலங்கை ராணுவத்தின் முப்படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக பொன்சேகா நியமிக்கப் பட்டார்.

இந்நிலையில் சரத் பொன்சேகா, தனது ராணுவ பதவியை சில வாரங்களுக்கு முன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்படத்தக்கது.

என்னத்த தான் எழுதறது??

Posted by மௌனமான நேரம் Friday, 6 November 2009 0 comments


என்னவோ எழுதனும்னு தான் தோணுது.... ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல்லியே!!!!!!!!!!!!!!..........

தமிழ்நாட்டு அரசியல் பத்தி எழுதலாமா....??

அச்சச்சோ.. அப்பறம் யாராவது அடிக்க வந்துட்டா...

ம்ம்.. அப்போ உலக அரசியல் பத்தி எழுதலாம்...

ஆத்தி...கற்றது கைமண்ணளவு ஆச்சே... நமக்கெதுக்கு வம்பு!!

கோலிவுட்.. பாலிவுட்.. ஹாலிவுட் பத்தி ஏதாவது???...

ஐயோ... வேண்டாம்பா... ஏதாவது ஏடாகூடமா எழுதி.. கேஸ் கீசுன்னு போய்ட்டா..!!!

இயற்கை, அறிவியல், புவியியல், இதுலே எதாவது ஒரு இயல பத்தி எழுதலாமோ???

ஆஹ.... அப்பறம் எழுதி முடிச்சிட்டு நான் மட்டும் தானே உக்காந்து படிக்கணும்.... !!!

குட் ஐடியா... சொந்த அனுபவம்....... ?????

நோ..நோ.. நான் என்ன அப்துல் கலாமா??

சரி சரி... நல்ல நல்ல சிந்தனைகள கொஞ்சம் எழுதுவோமா????

ஆமா நமக்கு நல்ல சிந்தனைன்னு தோன்றது வேற எல்லாருக்கும் சோதனையா தோணிட்டா..!!

ம்ம்.... சமுதாய சீர்திருத்த கருத்துக்கள்?????

stop it.... யாரும் படிக்க வேண்டாமா???????

வாவ்!!! கவிதை எழுதலாமே.... !!!

ம்ம்... எழுதலாம்... ஆனா கவிதைன்னு தலைப்பு போட்டிருந்தியே கவிதையை காணோமே ....எங்கே...எங்கே??? ன்னு எல்லாரும் கேட்டுட்டா???? - 'தேடுங்க.. தேடுங்க... தேடிக்கிட்டே இருங்க....தேடினாலும் கிடைக்காது....' ன்னு சொல்ல வேண்டி வந்துடிச்சின்னா??

ஓகே... கதை தான் கரெக்ட்...

No way... எழுத்தாளர்களும்... மேதைகளும் எழுதற எடத்துலே நாம போய் பேக்கு மாதிரி எதாவது எழுதி கேவலபடனுமா....

முயற்சியே பண்ணலைன்னா எப்படித்தான் முன்னுக்கு வர்றது.... ???

எல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு... அப்பரம் எல்லாரும் சேர்ந்து கும்மி எடுக்கும் போது வடிவேலு ஸ்டைல் லே.... 'என்ன நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கன்னு' சிரிச்சிகிட்ட வாங்கிக்கவா முடியும்...'

என்ன இப்படி தூக்கம் கண்ண சொக்குது... யோசிச்சி யோசிச்சி tired ஆகிட்டேனோ.... சரி இப்போ தூங்கிட்டு இனி நாளைக்கு யோசிச்சிக்கலாம்...

பதினாறும் பெற்று........

Posted by மௌனமான நேரம் Tuesday, 13 October 2009 0 comments


ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேல் சாக் (Dale Chalk, 31), தாரன் (Darren ) தம்பதியினர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்று இரு முறை சாதனை புரிந்த பிறகு மூன்றாம் முறையாக ஒரே பிரசவத்தில் இரட்டையரை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் செயற்கை முறையில் கருத்தரித்ததாக தெரிகிறது.

இவர்களுக்கு இதோடு 11 குழந்தைகள் ஆகிறது. 'எங்களுக்கு இன்னும் வேண்டுமென்று ஆசைதான் ஆனால் இன்னும் பெரிய பேருந்து வாங்க வேண்டியது இருக்கும்' என்று சொல்லியிருக்கின்றனர் இந்த பெற்றோர்.

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ன்னு சொல்லுவாங்களே.. அதுலே இன்னும் அஞ்சு கொறையுது. அந்த தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்!!!

மான்கறி வைத்தியர்!!

Posted by மௌனமான நேரம் Tuesday, 1 September 2009 0 comments

சென்னை, மைலாப்பூரில் பரம்பரை ராஜவைத்திய சாலை நடத்தி வந்தவர் டாக்டர் விஜயகுமார். மான் கறி மூலம் தயார் செய்யப்படும் மருந்தில் சகல வியாதிகளையும் குணமாக்க முடியும் என்று விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி ஈரோட்டை சேர்ந்த பெண் நடக்க முடியாத தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார். அவருக்கு மான்கறி வைத்தியம் செய்வதாக சொல்லி லட்சக்கணக்கில் பணத்தை கறந்தார் விஜயகுமார். ஆனால் நோய் குணமாக வில்லை.

மேலும் ஒரு ராஜவைத்தியம் செய்தால் உன் மகன் நடப்பான். அதற்கு இன்னும் நிறைய செலவாகும் என்று கூறி இருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஏற்கனவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

உடனே ஆத்திரம் அடைந்த விஜயகுமார் அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். இது பற்றி மைலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்ததால் வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஜெயிலில் இருந்த விஜயகுமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். துணை கமிஷனர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் தெரிய வந்தது. சென்னையில் 5 இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த ஒரு நோயாளியை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். தனது ராஜ வைத்தியத்துக்காக மதுரையில் மான் வேட்டையாடி மான்கறியை எடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

எனவே போலீசார் மான்கறி வைத்தியர் மீது சொத்து குவிப்பு, ஆயுத தடுப்பு சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், விதிகளை மீறி டி.வி.க்களில் விளம்பரம் செய்தது ஆகிய 4 வழக்குகளை புதிதாக தொடர்ந்துள்ளனர்.

[நன்றி: மாலை மலர்]


இந்த மான்கறி வைத்தியர் போல, கீரை வைத்தியம், அரேபிய வைத்தியம் என்று பலவிதமான போலி வைத்தியர் சுதந்திரமாக போலி வைத்தியம் பார்த்து வருகிறார்கள்.

பொதுமக்களாகிய நாம் தான், இது போன்ற விளம்பரங்களை கண்டு ஏமாற கூடாது...

டி.வி நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும் இது போன்ற விளம்பரங்களை ஊக்குவிக்க கூடாது...

இன்னும் புரியாத பெயர சொல்லி வைத்தியம் பார்க்கும் ஆசாமிகளையும் காவல்துறை கைது செய்தால், இன்னும் பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்கலாம்..

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் உள்ள லடாக் மலைப் பகுதியில் சில இடங்களில் எல்லையை நிர்ணயிப்பதில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இந்தப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதும், பின்னர் அவர்கள் பகுதிக்கு திரும்பிச் செல்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

இப்பிரச்சனை பகுதியில், சீன ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறந்து காலாவதியான உணவுப் பாக்கெட்களை வீசிச் சென்றுள்ளது.

இது குறித்து சீன அரசிடம் ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் கூறியுள்ளார்.

இந்த அத்துமீறல் உடனடியாக கண்டுபிடிக்க படவில்லை. இத்தகையான அத்துமீறல்களை தடுக்கவும், உடனடியாக கண்டுபிடிக்கவும் இந்தியா தன் இராணுவ திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும்..

வரும் முன் காப்பதே சிறந்தது!!..

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 2-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று, சனிக்கிழமையோடு 100 நாள் நிறைவு ஆகிறது.

மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த இருக்கும் 25 அம்ச திட்டங்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வெளியிட்டு இருந்தார்.

அதன் படி, 100 நாள் செயல் திட்டத்தை அனைத்து அமைச்சகங்களும் வகுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த 100 நாள் நிறைவான நிலையில் சில துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பலவற்றில் கடும் சோதனைகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது.



சில சாதனைகள்:

1. உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின் உள்நாட்டுப் பாதுகாப்பு மேம்பட்டிருப்பது

2. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது

3. 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டது

4. பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது,

இவை எல்லாம் சாதனைகளாக கருத படுகிறது.

சில வேதனைகள்:

1. நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் சுகாதார அமைச்சகத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது

2. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு

3. பருவ மழை தவறும் நிலையில், உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையும். இந்நிலையில், விலைவாசி கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட வேண்டும்.

அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த படும் என்று சொன்ன 25 அம்ச திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற படாத நிலையில், மிக அவசியமான திட்டங்களை சீக்கிரமே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!

Posted by மௌனமான நேரம் Saturday, 29 August 2009 0 comments

அவசியம் இல்லாமல், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அலையும் அரசியல் தலைவர்கள் மற்றும் வி. ஐ. பி - களுக்கு மத்தியில் சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!.

மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு பெரும்பாலும் கோல்கத்தாவில் இருந்து வரும் சோம்நாத், தில்லி வரும் சமயங்களில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாவலர்கள் போடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், பாதுகாப்பு தருமாறு நான் கோரவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறவேண்டும் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டு நலனில் அக்கறையுள்ள சோம்நாத் சாட்டர்ஜி உண்மையில் ஒரு ஜென்டில்மேன் தான்.

"அவுட்லுக்' என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்வந்த் சிங்,

"....எப்படியாவது பிரதமர் பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு இருந்தது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

பார்ப்பதற்கே வினோதமாக இருந்த ஒருவர் பையில் கட்டுகட்டாக பணம் எடுத்துவந்தார். அவையெல்லாம் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகக் கொடுத்தவை என்று கூறப்பட்டது. சுதீந்திர குல்கர்னி அந்த நபருடன் இருந்தார். அந்த நபரைப் பற்றிக் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட அத்வானி, ""இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டுபோய் மக்களவையில் அப்படியே காட்டுங்கள்'' என்று அந்த 3 உறுப்பினர்களிடம் கூறிவிட்டார்.

ஆளும் கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் அவசரப்பட்டதைப் போலவே தெரிந்தது.

தலைமைப் பதவிக்கு வர நினைப்பவர்களுக்கு இவையெல்லாம் அழகு அல்ல என்பதை அவர் உணரவில்லை. அந்தப் பணம் அப்படியே ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து தரப்பட்டிருந்தாலும் முதலில் அதை மக்களவைத் தலைவரிடம் கூறி, அவரின் கவனத்துக்குக் கொண்டுவந்துவிட்டு அவர் என்ன கூறுகிறாரோ அதன்படி செயல்பட்டிருக்கலாம்.

மக்களவைத் தலைவர் பாரபட்சமாக நடந்து கொண்டுவிடுவார் என்ற அச்சம் இருந்திருந்தால் அந்தப் பணத்தை அவைக்குக் கொண்டுவந்துவிட்டு, அதைப் பற்றிப்பேசி புகார் தெரிவித்துவிட்டு பிறகு அவையின் தலைவரிடம் ஒப்படைத்திருக்கலாம்.

இதனால் மக்களவையின் மாண்பும் நாட்டின் மரியாதையும் காப்பாற்றப்பட்டிருக்கும். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான என்னிடம் கூட ஆலோசனை கலக்காமலேயே அத்வானி இதைச் செய்தார்.

ராணுவத்தில் தளபதிகளுக்குக் கூறப்படும் இலக்கணமே வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் முன்னணியில் நின்று அதை ஏற்பதுதான். அத்வானிக்கு அந்த குணமே கிடையாது. தவறு நடந்தது என்றால் அந்தப் பழி தன் மீது வந்துவிடக்கூடாது என்று நினைப்பார். நெருக்கடி வந்தால் மௌனம் சாதிப்பார் அல்லது பொறுப்பை யார் மீதாவது சுமத்திவிடுவார்.

ராஜ்நாத் சிங் ஒரு மாநிலத்துக்குத்தான் கட்சித் தலைவராக இருக்கத் தகுதியானவர். அவரை தேசியத் தலைவராக்கியது தவறு.

பாரதிய ஜனதா அரசியல் கட்சியாகவே இல்லை. ஒரு வழிபாட்டுக் கூட்டம், தலைவன் சொல்படி செயல்படும் கும்பல் என்ற அளவுக்குச் சுருங்கிவிட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல ஆகிவிட்டது.

நான் வெளிநாடு சென்றிருந்தபோதுதான் பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்கள் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, எல்லைகளில் நமது துருப்புகள் கொண்டுபோய் நிறுத்தப்பட்டனர். நான் அவ்விரு முடிவுகளையும் ஏற்கவில்லை.

எல்லை பாதுகாப்புப் படையினரை வங்கதேசத்துக்குள் அனுப்புவது என்ற முடிவும் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவரை மூங்கிலில் கட்டி தூங்கிவந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு மனம் பதைத்தேன். எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) என்பது உள்துறை அமைச்சகத்தின் கட்டளைப்படிதான் செயல்படும். வங்கதேசத்துக்கு பி.எஸ்.எஃப்-பை அனுப்பியது யார் என்று நான் கேட்டதற்கு எனக்குக் கடைசி வரையில் பதிலே சொல்லவில்லை.." என்றார் ஜஸ்வந்த் சிங்.

பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்குத் தேவைப்படும் "ஓசல்டாமிவிர்'' (டாமிபுளூ) மாத்திரைகள் இன்னும் 10 அல்லது 12 நாள்களில் இந்திய மருந்துக் கடைகளில் சில்லரையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை ரன்பாக்ஸி, சிப்ளா, மெட்கோ, ஹெடரோ, ஸ்ட்ரைட்ஸ், ரோச் ஆகிய 6 பெரிய மருந்து நிறுவனங்கள் பெற்றுள்ளன.


இந்த மருந்துகளை சில்லரை விற்பனை மூலம் விற்கலாம் என்ற அறிவிப்பை இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்னும் 10 அல்லது 12 நாள்களில் பிறப்பிக்கும்.


பச்சை குத்திய நடிகை, இப்போ?

Posted by மௌனமான நேரம் Friday, 28 August 2009 0 comments

இடது கையில், ஆட்டக்காரரின் பெயரை பச்சை குத்திய நடிகை, இப்போது தன் வலது கையில், மந்திர கயிறு கட்டியிருக்கிறார் போல. இது, கேரள மந்திரவாதி மந்திரித்து கட்டிய கயிறாம்.

ஆட்டக்காரர் தன்னை விட்டு பிரிந்து போய் விடக் கூடாது என்பதற்காகவே இந்த வசிய கயிறை கட்டியிருக்கிறாராம் அந்த நயமான நடிகை!



பிரியமான நடிகை!!

Posted by மௌனமான நேரம் 0 comments

பிரியமான நடிகையும், பிருதிவி நடிகரும் நெருக்கமாக பழகி வருவது, கோடம்பாக்கம் முழுவதும் அறிந்த சங்கதி.

இந்த நெருக்கமான பழக்கத்துக்கு இரண்டு பேரும் புதுசாக ஒரு காரணம் சொல்கிறார்கள். "எங்கள் இரண்டு பேரின் அம்மாக்களும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அதனால் தான் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்'' என்று!

நட்பு உறவிலும், உறவு விவாகரத்திலும் முடியாதவரை தப்பு இல்லைதான்!


உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை மியாட்மருத்துவ மனையில் “மோட்” என்ற பெயரில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.


விழாவில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,


"....என் மனைவி உடல் உறுப்புகளை முதன் முதலாக தானம் செய்தார். அவரை மனைவியாக அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். பொதுவாக ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருக்கிறார். எனது மனைவியின் வழியில் நானும் எனது உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்....."


முதலில் துர்கா ஸ்டாலின், உடல் உறுப்புகளை தனது வாழ்க்கைக்கு பிறகு அளிப்பதான உறுதிமொழி பத்திரம் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

அதை தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினும், தனது உடல் உறுப்பினர்களை தானம் செய்வதாக அறிவித்தார். அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.


தொடர்ந்து 1500 பேர் உறுப்புகள் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.


வரவேற்கும் படியான ஒன்று...


நன்றி!!

தென்மண்டலத்தில் கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறித்து, மீண்டும் ஒருமுறை இடைத்தேர்தல் நாயகனாகியிருக்கிறார் மத்திய அமைச்சரும், தி.மு.க-வின் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி.


இடைத்தேர்தல் வெற்றி பற்றி கேட்டபோது,

".....எண்பத்தாறு வயதிலும் ஓயாத உழைப்போடும், உறுதியோடும் மக்களுக்காக நல்லாட்சி நடத்தும் தலைவர் கலைஞர் ஒருபக்கம்...



'ஜனநாயகம் செத்துப் போச்சு, அராஜகம் அதிகமாகிப் போச்சு' என்று கூப்பாடு போடும் ஜெயலலிதாவும், அந்தம்மாவுக்கு கைத்தடியா வைகோ, ராமதாஸுன்னு சிலரும் இன்னொரு பக்கம்...

இவங்களுக்கு மத்தியில், வயசான பிறகும் ஹீரோ வேஷம் போட்டுக்கிட்டு வேப்பமரத்தை சுத்தி ஹீரோயினுடன் டூயட் பாடிக்கிட்டிருக்கிற விஜயகாந்த் ஒருபக்கம்... இந்தத் தேர்தலில் தி.மு.க-வை தோற்கடிக்க பலரும் அணி அணியா திரண்டு நின்னாங்க. எல்லாத்தையும் மீறி நடுநிலைமையா நின்னு மக்கள் கொடுத் துட்டாங்களே, தீர்ப்பை..!



தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தோளிலேயே மாறி மாறி சவாரி செய்த கம்யூனிஸ்ட்களின் உண்மையான பலமும் இந்தத் தேர்தலில் தெரிந்துவிட்டது. மொத்தத்தில் உண்மை எது, பொய் எதுன்னு மக்கள் பகுத்துப் பார்த்து ஓட்டுப் போட்டிருக்காங்க. இந்த வெற்றி தந்த உற்சாகம், இன்னும் நூறு தேர்தலை சந்திக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் தந்திருக்கு...''


நான் சுகந்தன். ஒரு வக்கீல். தெரிஞ்சோ தெரியாமலோ , விரும்பியோ விரும்பாமலோ நான் ஒரு விவாகரத்து specialist ஆகிட்டேன். இத சொல்றதுக்கு எனக்கு சத்தியமா பெருமை இல்ல. ஆனா இந்த நிமிஷம் வரை வருத்தமாவும் இல்ல. இப்போ திடீர்னு ஏன் வருத்தம்? எல்லாத்துக்கும் காரணம் என உயிர் நண்பன் வினோத் தான். வினோதினியும் தான்.

நான், வினோத், வினோதினி மூவரும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே தெருவில் உருண்டு புரண்டு, ஒரே பாலர் பள்ளியில் சேர்ந்து, சேர்ந்து படித்து, சேர்ந்து விளையாடி, சேர்ந்து சண்டை போட்டு, ஒரே மாங்காயை காக்கை கடி கடித்து, இப்படி சேர்ந்து சேர்ந்து வளர்ந்தோம். ஆனால் மேற்படிப்பு என்று வரும்போது நான் வக்கீல் ஆனேன். அவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆனார்கள். இதற்கிடையில், அவர்களுக்குள்ளே காதலும் வளர்ந்தது.

எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அவர்களை பார்த்து ஆச்சரியப்படாத, பொறாமைபடாத ஆளே கிடையாது. பெயரிலிருந்து செயல் வரை எல்லாவற்றிலுமே அப்படி ஒரு பொருத்தம். அவர்கள் இருவருக்கும் பெரிய சண்டை வந்து கூட நாங்கள் பார்த்தது இல்லை. ரெண்டு பெரும் மாறி மாறி வினும்மா என்று கொஞ்சுவதை எல்லோரும் கேலி செய்தாலும் ரொம்ப ரசிப்போம் என்பது தான் உண்மை.

அவர்கள் பெற்றோருக்கும் இவர்கள் காதலில் எதிர்ப்பு ஒன்றும் இருக்கவில்லை. சாதி, மதம், அந்தஸ்து என்று எல்லாவற்றிலுமே ஒரே நிலையில் இருந்தது தான் காரணமோ என்னமோ தெரியவில்லை. எது எப்படியோ, ஆசைப்பட்டு காதலித்து , ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணமும் பண்ணி... ஹ்ம்ம்.. முன்னெல்லாம் ஒரே ஊரில் இருந்ததால் எப்போதும் சேர்ந்தே இருந்தோம். வேலை என்று வந்த பிறகு வெவ்வேறு ஊர்களில் இருக்க வேண்டியது வந்தது. ஆனாலும், கண்டிப்பாக 2 நாளுக்கு ஒரு முறையாவது பேசிவிடுவோம். ஆனால் அவர்கள் கல்யாணத்திற்கு பிறகு அது மாதம் ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆகி இப்போ இன்னும் குறைந்து விட்டது.

அந்த வினோத் தான் இன்று என்னை பார்க்க வந்திருக்கிறான்.

'டேய்.. ரொம்ப நாள் ஆச்சி பாத்து.. போன் பண்ணனும்னு நினைக்கிறேன்,,, ஆனா பண்ண முடியறதில்லை.. ரொம்ப சந்தோஷம்டா ... '..

நானே பேசிகொண்டிருந்தேன்... இப்போதுதான் கவனித்தேன்.. அவன் முகம் வாடியிருப்பதை..

'ஏன்டா எதாவது பிரச்சனையா? வினு எங்கே? வரலியா? என்ன??' பதட்டம் தொற்றி கொண்டது.

'அவ வரமாட்டா!!'

' அவளுக்கு உடம்புக்கு எதாவது????'

'உடம்பெல்லாம் கொழுப்பு அதிகமானது தவிர நல்லா தான் இருக்கா ...'

'என்னடா இந்த வயசிலேயே cholestrol-எ . டாக்டர் கிட்ட போனீங்களா ?'

'ஏன்டா நீ வேற... கல்லு மாதிரி நல்லா தான் இருக்கா...'

'சண்டையா?

'ஒத்து வராதுடா.. அதான் உன்கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்'

'என்ன விளையாடரியா? '

'இல்லடா சீரியஸ் தான் பேசறேன். ஒத்து வராதுன்னு ஆயிடிச்சி. அதான் ரெண்டு பெரும் மனசு ஒத்து பிரிஞ்சிடலாம்னு...'

நானும் அவன்கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தேன். அவன் கொஞ்சம் கூட பிடி தளர்த்தவே இல்ல. நான் நொந்து போனது தான் மிச்சம். எவ்வளவு கேட்டும் 'ஒத்துவராது' ன்னு மட்டும் தான் சொல்றான். ஏன் ன்னு சொல்ல மாட்டேங்கறான்.

'சரி. நீ இப்போ கிளம்பு. நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்'.

'நான் நாளைக்கு லீவ் தான் 10 மணிக்கு வா, அப்போ தான் அவ இருக்க மாட்டா.'

தலையில் அடிச்சிக்கலாம் போல இருந்தது எனக்கு. அவனை அனுப்பிட்டு நேரா கிளம்பி விநோதினியை பாக்க போனேன். ஒரு மணி நேர பயணம். ஆனால் போன் இல் பேசுவதை விட நேரில் பேசுவதுதான் நல்லது என்று தோணியது. எப்போதும் கலகலப்பாக சிரித்த முகத்துடன் வரவேற்கும் வினோதினி வேண்டா வெறுப்பாக பார்த்தாள்.

'எப்படி இருக்கே வினோதினி?'

'இருக்கேன்... '

'நேத்து வினோத் வீட்டுக்கு வந்திருந்தான்.'

'ம்ம்...'

'என்ன பிரச்சனைன்னு கேட்டேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறான். '

விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். பிரச்சனை இதுதான். வேலைக்கு போகும் வரை இருவருக்கும் நிறைய நேரம் இருந்தது.. பேச, புரிந்து கொள்ள... இப்போது ரெண்டு பேரும் அவரவர் வேலையில் பிஸி ஆகி விட்டதால் பேச கூட நேரமில்லை. சேர்ந்திருக்கும் கொஞ்ச நேரமும் சின்ன சின்ன பிரச்சனை.. அதை தீர்க்க நேரமில்லாமல் இப்போது பூதாகரமாக ஆகிவிட்டிருக்கிறது..அவளை சமாதான படுத்திவிட்டு கிளம்பினேன்..

அடுத்த நாள் நன்றாக யோசித்து வினோத்துக்கு போன் பண்ணினேன். ரொம்ப நேரம் பேசி கஷ்டப்பட்டு அவனை சம்மதிக்க வைத்தேன்.

நான் சொன்னது இதுதான். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது இருவரும் சேர்ந்து இருக்கவேண்டும், அந்நேரம் எதாவது ஒரு காரியம் சேர்ந்தே செய்ய வேண்டும். அந்த நேரத்தில் பள்ளி காலத்தில் எப்படி பேசினார்களோ அதை போல் பேசி கொள்ள வேண்டும். திருமணம் ஆனதை அடியோடு மறந்து விட வேண்டும்.

விநோதினிக்கும் போன் பண்ணி இதையே சொன்னேன். 'இதென்ன சிறுபிள்ளைத்தனம்' என்றாள். கடைசியில் ஒரு வழியாக சம்மதித்தாள். இது நடந்து ஒரு வாரமாக அவர்கள் இருவரும் என்னிடம் பேசவே இல்லை. நான் கூட என் master plan failure ஆகி விட்டதோ என்று நினைத்தேன்.

அவர்களை பிரித்து வைக்க மனம் ஒப்பவில்லை. ஓடி போயிடலாம் போல இருக்கு. சரி எதுக்கும் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

ஆச்சரியம்... ரெண்டு பேருமே வீட்டில் இருக்காங்க ... ஆண்டவனை வேண்டிகிட்டே உள்ளே போனேன். ரெண்டு பேர் முகத்தையும் பாத்து ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே. சரி அவங்களே ஆரம்பிக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்.

'ரொம்ப தேங்க்ஸ் டா...'

ரெண்டு பேரும் சேர்ந்து தான் சொன்னாங்க.

'எங்களுக்குள்ள இருந்தது பிரச்சனை இல்லை ...மனதளவில் தூரம் தான் இருந்தது.. இப்போ ஒரு வாரமா எவ்வளவு வேலை இருந்தாலும் நீ சொன்ன மாதிரி ஒரு மணி நேரம் சேர்ந்து இருக்கிறோம்..சும்மா பேசிட்டு.... சிரிச்சிட்டு. .. இவ்வளவு நாள் எத இழந்திருக்கோமோன்னு இப்போ புரியுது. நாங்க கொஞ்ச நேரம் சேர்ந்து spend பண்ண ஆரம்பிச்ச பிறகு முன்னாடி வந்த பிரச்சனைகள் எதுவுமே வரலே. அப்படியே வந்தாலும் பேசி தீத்துக்கறோம். 2 வாரம் லீவ் எடுத்துட்டு எங்கேயாவது போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம்.

எல்லாமே உன்னாலே தாண்டா.. '

நான் ஒண்ணுமே சொல்லலே..

இப்போ தான் ஒரு நிம்மதி மனசுலே. காரணமே இல்லாம பிரிய இருந்த ஜோடியை சேர்துட்டோம்னு ஒரு நிம்மதி எனக்கு.

உறவு பலப்பட மனசு விட்டு பேசறது எவ்வளவு முக்கியம்.. இது புரிஞ்சாலே பாதி பிரச்சனை தீந்துடும்.

ரேஸ் லே ஓடுற குதிரை பாத்திருக்கோம்...

ரோடு மேல ஓடற குதிரை பாத்திருக்கோம்...

கார் மேல ஓடற குதிரை பாத்திருக்கோமா....

இங்கே பாருங்க....


ஆசை...ஆசை...ஆசை...ஆசை

Posted by மௌனமான நேரம் Tuesday, 25 August 2009 0 comments


அன்னாடம் காய்சிக்கு மாச சம்பளம் வாங்க ஆசை... மாச சம்பளம் வாங்குபவனுக்கு மாச சம்பளம் குடுக்க ஆசை.. சம்பளம் குடுப்பவனுக்கு லட்சாதிபதி ஆக ஆசை...லட்சாதிபதிக்கு கோடீஸ்வரனாகனும்னு ஆசை... அவனுக்கோ அதுக்கும் மேல வேணும்னு ஆசை...

ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...ஆசை...

அது என்னவோ நமக்கிட்ட எவ்வளவு இருந்தாலும் அடுத்தவங்ககிட்ட இருக்கறது மேல தான் ஆசை வருது...

உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் பாடகர் ஜாக்சன் (வயது 50). கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மரணம் அடைந்தார். சாவுக்கு அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே கொடுத்த மருந்தே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மைக்கேல் ஜாக்சன் தூங்க செல்வதற்கு முன்பு மயக்கம் தரக்கூடிய அதிசக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கம் என்பது குறித்த ஆவணங்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.

மைக்கேல் ஜாக்சனின் உடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தலைமை பிரேத பரிசோதகர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் - ஜாக்சன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.



அவர், ஜாக்சன் உட்கொண்டிருந்த மருந்து மாத்திரைகளில் உள்ள விஷத்தன்மை குறித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த அறிக்கையும், டாக்டர் முர்ரேயின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் ஹூஸ்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

அதில், அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் அறிக்கை தெரிவித்துள்ளது.


இதன் மூலம் ஜாக்சன் மரண வழக்கை கொலை வழக்காக லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் மாற்றவுள்ளனர்.

இதையடுத்து ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா கோர்ட் தேடுதல் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. அந்த வாரண்ட் உத்தரவில், லாஸ் ஏஞ்சலெஸ் தலைமை மருத்துவ தடயவியல் அதிகாரி டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு அதிக அளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்சன் மரண வழக்கு கொலை வழக்காக மாறுகிறது. டாக்டர் கான்ராட் முர்ரே கைது செய்யப்படவுள்ளார்.


Widget By Devils Workshop

வேளாண் ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியாக கருதப்படும் பி.டி. கத்தரிக்காய் வேண்டுமா, வேண்டாமா?

முந்தைய பதிவுகள்